Thursday, December 01, 2005

நெல்லிக்காய் ஜாமூன்

தேவையான பொருட்கள்
அரை நெல்லிகாய்
ஜீனி - தேவையான அளவு
ஏலக்காய் பொடித்தது - சிறிதளவு

செய்முறை
1. ஜீனியை நீரில் கரைத்து பாகு காய விடவும். சற்று நீர்க்க இருக்க வேண்டும்.
2. கழுவிய அரைநெல்லிக்காய்களை ஜீனிப்பாகில் போட்டு வேகவிடவும்.
3. நெல்லிக்காய்கள் வெந்ததும் ஏலம் போட்டு இறக்கவும்.
4. அருமையான நெல்லிகாய் ஜாமூன் தயார். அப்படியே தின்னலாம். புளிப்பும் இனிப்பும் கலந்து பிரமாதமாக இருக்கும்.

அன்புடன்,
கோ.இராகவன்

8 comments:

said...

என்னங்க நீங்க சகலகலா வில்லன் சாரி வல்லவன் போலருக்குதே.

இது உங்க ரிசிப்பியா, உங்க வீட்டாளுதா இல்ல வேற யாருதுமாவா?

இருந்தாலும் சூப்பரா இருக்கு!

said...

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்களை தினமும் ஒன்றாக காலையில் உண்ண, நினைவுத்திறனும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். (நெல்லிக்காயில் வைட்டமின்C நிறைய இருக்கிறது)

said...

சூப்பர். இதுவரை கேள்விபட்டதே இல்லை. உங்கள் பதிவுகளைப் போல் சுவைக்கும் என்று நினைக்கிறேன் (புளிப்பும் இனிப்புமாகன்னு சொல்லலை) :-).

ஜோசப் சார். இது நிச்சயமா இராகவனோட ரெசிப்பியாகத் தான் இருக்கவேண்டும். ஐயா இன்னும் மாட்டிக்கலை. அதனால வீட்டாளுது இல்லை.

said...

// இது உங்க ரிசிப்பியா, உங்க வீட்டாளுதா இல்ல வேற யாருதுமாவா? //

ஜோசப் சார். இந்த ரெசிப்பி என்னுடையதில்லை. என்னோட தூத்துக்குடி அத்தையோடது. பொதுவாகவே நான் போடுற ரெசிப்பீஸ் (சைவமோ அசைவமோ) என்னோடதத்தான் இருக்கும். ஆனா இது கொஞ்சம் புதுமையானது. தூத்துக்குடி வீட்டுல அரநெல்லி மரம் இருந்தது. அதுல இருந்து பறிக்கிறத அத்த இந்த மாதிரி செஞ்சி வெப்பாங்க.

said...

// தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்களை தினமும் ஒன்றாக காலையில் உண்ண, நினைவுத்திறனும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். (நெல்லிக்காயில் வைட்டமின்C நிறைய இருக்கிறது) //

சரியாகச் சொன்னீங்க தேன்துளி. நெல்லிக்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. தேனில் ஊறியதென்றால் இன்னும் சிறப்பு.

said...

சரி சரி இனிப்பும் புளிப்புமா நீங்களே தின்னுங்க.

யாருக்கு வேணுமாம் இது.

( அழுகை சத்தம் கேக்குதா?)

said...

// சரி சரி இனிப்பும் புளிப்புமா நீங்களே தின்னுங்க.

யாருக்கு வேணுமாம் இது.

( அழுகை சத்தம் கேக்குதா?) //

கேக்குது டீச்சர். ஆனா எதுக்கு அழுகுறீங்க? என்னாச்சு? கொஞ்சம் விளக்கமாச் சொன்னாத்தானே தெரியும்.

said...

எதுக்கு விளக்கம்?
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

நெல்லிக்காய் கிடைக்காத ஊர்லே நான் இருக்கறது யாருக்காவது ஞாபகம் இருக்கா இல்லையா?