Monday, January 02, 2006

முழுநெல்லி பிசைஞ்ச ஊறுகாய்

தேவையான பொருட்கள்
முழுநெல்லிக்காய் - வேண்டிய அளவு
மிளகாய்த் தூள் - அளவிற்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - வேண்டிய அளவு

செய்முறை
1. நெல்லிக்காயை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.
2. சிறிதளவே தண்ணீர் விட்டு, அதில் மஞ்சப்பொடியும் போட்டு, நெல்லிக்காய்களை ஆவியில் நன்றாக வேகவிடவும். வேகும் பொழுது அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
3. வெந்த பிறகு நெல்லிக்காய்களை எடுத்து ஆறவைக்கவும்.
4. ஆறிய நெல்லிக்காய்களைப் பிதுக்கினால் சதையும் கொட்டையும் தனித்தனியாக வந்துவிடும்.
5. சதைப்பற்றை மட்டும் எடுத்துக் கொண்டு லேசாகப் பிசையவும். கஞ்சியாகவும் பிசையக் கூடாது. முழுசாகவும் விட்டு விடக்கூடாது. இரண்டும் கலந்தாற்போல இருக்க வேண்டும்.
6. அடுப்பில் வாணலியைக் காய வைத்து எண்ணெய் விடவும்.
7. கடுகு உளுந்தம் பருப்பு போட்டு வெடித்ததும், கருவேப்பிலைகளைப் போடவும்.
8. பெருங்காயமும் மிளகாய்த்தூளும் தேவையான உப்பும் கலந்து எண்ணெய்யில் போடவும்.
9. உடனேயே நெல்லிகாய் பிசையலைப் போட்டு நன்றாகக் கிண்டவும்.
10. பார்ப்பதற்கு அல்வா பதத்திற்கு வந்ததும் சட்டியை இறக்கி வைக்கவும்.
11. அருமையான நெல்லிக்காய் பிசைஞ்ச ஊறுகாய் தயார். தயிர்ச்சோறு, தோசை, இட்டிலி வகைகளுக்கு நன்றாக இருக்கும்.


அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

இந்த நெல்லிக்காய் ஊறுகாய் எனக்குப் பிடிக்கும் என்பதால் செய்முறைக்கு நன்றி!

said...

அருமையான சமையல் குறிப்பு. படிக்க படிக்கவே ருசிக்கிறது. தங்களின் குறிப்பிற்கு நன்றி......

said...

எங்க பாட்டி ரொம்ப அருமையாகச் செய்யும் பதார்த்தங்களில் இதுவும் ஒண்ணு.
ரொம்ப டாங்க்ஸ்பா ரெசிப்பிக்கு.முயற்சி செய்து பார்த்திட்டு மயில் அனுப்பறேன்

said...

இந்த ஊறுகாயை இங்கே கடையில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். வீட்டில் செய்ததில்லை. முழு நெல்லிக்காயும் இங்கே கிடைப்பதில்லை. கிடைக்கிறதா என்று தேடிப்பார்க்கவேண்டும்.

ஒரு சந்தேகம். நெல்லிக்காயை வேகவைத்த பின் அதைய பிசைய வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்களே. கையால் பிசையலாமா? கையால் பிசைந்தால் சீக்கிரம் கெட்டுப் போய் விடாதா?

said...

அட போங்க வயிற்றெரிச்சல் கிளப்பாதீங்க.. இங்க ஊறுகான்னு பேருல கண்டதையும் தின்ன வேண்டியதாப்போச்சு..

செய்முறை மட்டும் போதாது ஒரு பாட்டில் கொடுத்து விடுங்களேன்.

said...

// இந்த நெல்லிக்காய் ஊறுகாய் எனக்குப் பிடிக்கும் என்பதால் செய்முறைக்கு நன்றி! //

செஞ்சு பாருங்க தங்கமணி. பிரமாதமாய் இருக்கும்.

// அருமையான சமையல் குறிப்பு. படிக்க படிக்கவே ருசிக்கிறது. தங்களின் குறிப்பிற்கு நன்றி...... //

நீங்களும்தான் அநுசுயா. செஞ்சு பாருங்க.

said...

// ரொம்ப டாங்க்ஸ்பா ரெசிப்பிக்கு.முயற்சி செய்து பார்த்திட்டு மயில் அனுப்பறேன் //

அப்படிப் போடுங்க சுதர்சன். இதுதான் சூப்பர். செஞ்சிட்டு மயில் அனுப்புங்க.

said...

// ஒரு சந்தேகம். நெல்லிக்காயை வேகவைத்த பின் அதைய பிசைய வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்களே. கையால் பிசையலாமா? கையால் பிசைந்தால் சீக்கிரம் கெட்டுப் போய் விடாதா? //

ஆமாம். வேக வைத்த பின் பிசைய வேண்டும். பிறகு எப்படி கொட்டையை எடுப்பது. கையை நன்றாகக் கழுவி விட்டது துடைத்தும் விட்டு பிறகு பிசையுங்கள். இதுவரை எங்கள் வீட்டில் எப்பொழுதும் கெட்டுப் போனதேயில்லை. அல்லது கெட்டுப் போகும் வரைக்கும் விட்டு வைப்பதில்லை. :-)

கையை விட்டுப் பிசிறினாலும் பிறகு சட்டியில் போட்டு சுருட்டுவதால் பிரச்சனை வராது.

ரொம்பவும் யோசித்தால், கொட்டையை நீக்கி விட்டு, பாதி நெல்லிக்காயை மட்டும் மிக்சியில் ஒரு சுத்து விடலாம்.

said...

// அட போங்க வயிற்றெரிச்சல் கிளப்பாதீங்க.. இங்க ஊறுகான்னு பேருல கண்டதையும் தின்ன வேண்டியதாப்போச்சு..

செய்முறை மட்டும் போதாது ஒரு பாட்டில் கொடுத்து விடுங்களேன். //

ரசிகவ், உண்மையிலேயே ஊறுகாய் செய்றது ரொம்ப ஈசி. நெல்லிக்காயின்னு இல்ல. அரேபியாவுல கிடைக்கிற காய்கள வெச்சும் ஊறுகா செய்யலாம். அரேபியாவுல தக்காளி கூடவா கெடைக்காது! எடுத்துப் போட்டு ஏதாவது கிண்டிப் பாருங்க....ஜம் ஜம்முன்னு கிடைக்கும். அப்படியில்லைனா இறால்ல கூட ஊறுகாய் பண்ணலாமே. ரொம்ப ஈசி. நாள்படவும் இருக்கும்.

said...

சமையல்லேயும் நீங்க கெட்டிக்காரர்தான் போங்க,என்னா என் வூட்டுக்காரம்மாகிட்ட சொன்னேன் செய்ய சொல்லி ,முறைக்கிரா, டேஸ்ட்டுக்கு கொஞ்சம் அனுப்புங்களேன்.

said...

சமையல்லேயும் நீங்க கெட்டிக்காரர்தான் போங்க,என்னா என் வூட்டுக்காரம்மாகிட்ட சொன்னேன் செய்ய சொல்லி ,முறைக்கிரா, டேஸ்ட்டுக்கு கொஞ்சம் அனுப்புங்களேன்.

said...

டேஸ்ட்டுக்கு அனுப்பச் சொல்லி ரெண்டு வாட்டி கேக்குறீங்க....எப்படி அனுப்புறது? எங்க அனுப்புறது?

பேசாம நெல்லிக்கா சீசன் வரும் போது வீட்டுக்கு வாங்க...நானே செஞ்சு தர்ரேன்.

said...

My mouth jus filled with salaiva - orey jollu