Monday, January 30, 2006

ஹிண்டி மொசுரு

இதென்னடா பேருன்னு பாக்குறீங்களா! அது ஒரு சுவையான விஷயம். இது வடகர்நாடக மக்கள் விரும்பும் ஒரு உணவு. எனக்கும் பெங்களூர் வந்தப்புறம் மிகவும் பிடிச்சுப் போன உணவு. ஆகையால இதப் பத்தி ஒங்களுக்கெல்லாம் சொல்லலாமுன்னு பாக்குறேன். சொல்றத ஒழுங்கா குறிச்சி வெச்சுக்கிட்டு செஞ்சு பாருங்க.

ஹிண்டி மொசுருக்குப் போறதுக்கு முன்னாடி ஈருள்ளிச் சப்பாத்தியப் பாப்போம். ஏன்னா. ஹிண்டி மொசுரத் தொட்டுக்கிட்டுதான் ஈருள்ளிச் சப்பாத்தியச் சாப்பிடனும்.

வடக்கு கர்நாடகா, அதாவது பிஜாப்பூர் சுத்து வட்டாரம். கொஞ்சம் வறண்ட பிரதேசம். மராட்டியும் கன்னடமும் கலந்த கலாச்சாரம். அங்க சோறெல்லாம் கெடைக்காது. சோளமும் கோதுமையும்தான்.

சோளத்தை ஜோளம்-ன்னு சொல்வாங்க. கோதுமைய கோதின்னு சொல்வாங்க. அவங்க ஊருல ஜோளத ரொட்டி (சோள ரொட்டி) ரொம்பப் பிரபலம். சுட்டு வெச்சு அதக் காய வெச்சிக்கிருவாங்க. காஞ்சதும் கடக்மொடக்குன்னு இருக்கும். அந்த ரொட்டிக்கே கடக் ரொட்டீன்னுதான் பேரு. அத ஹிண்டி மொசுருல தொட்டுக்கிட்டு ருசிச்சி ருசிச்சிச் சாப்பிடுவாங்க.

நம்ம ஜோளத ரொட்டியை விட்டுட்டு ஈருள்ளிச் சப்பாத்தியைப் பார்ப்போம். நம்ம செய்யுற சப்பாத்தி போலதான். ஆனா வெங்காயத்த இடிச்சுச் சாறெடுத்து அதச் சப்பாத்தி மாவுல கலந்துருவாங்க. இப்ப மிக்சர் இருக்குறதால வெங்காயத்தை நல்லா அரைச்சு சப்பாத்தி மாவுல பெசஞ்சு கலந்துருவாங்க. அதச் சப்பாத்தி போட்டா அதுதான் ஈருள்ளிச் சப்பாத்தி. அங்க வெயில் நெறைய. அதனால குளிர்ச்சிக்கு வெங்காயத்தை இப்படி சேத்துக்குவாங்க.

இப்ப ஈருள்ளி சப்பாத்தி தயார். ஹிண்டி மொசுருதான் மிச்சம். இதுல மொசுருன்னா தயிர். அவ்வளவுதான். ஆகையால நாம இப்பப் பாக்க வேண்டியது ஹிண்டி மட்டும்தான்.

நிலக்கடலப் பருப்பை எண்ணெய்யில்லாம நல்லா வறுத்து, தோல உரிச்சுக்கணும். அத்தோட பூண்டுப் பற்கள், கொஞ்சம் கல்லுப்பு, தேவையான அளவு மெளகாத்தூள் போட்டு இடிச்சு வெச்சுக்கோங்க. மிக்சர் இருந்தா எதக்கலும் கொதக்கலுமா அரைச்சு வெச்சுக்கோங்க. ஹிண்டி தயார். அங்கெல்லாம் உறப்பு நல்லா சாப்பிடுவாங்க. ஆகையால நெறைய மொளகாப்பொடி போடுவாங்க. நமக்குத் தேவைக்கு நம்ம போட்டுக்கலாம். பச்சைப் பூண்டு பிடிக்காதவங்க பூண்டுப் பற்கள எண்ணெயில்லாம வதங்கியும் போடலாம்.

ஈருள்ளிச் சப்பாதிய தட்டுல போட்டுக்கோங்க. ஹிண்டிய தட்டுல பொடி போட்டுக்கிற மாதிரி போட்டுக்கிட்டு அதுல மொசுர (தயிர) ஊத்திக் குழப்புங்க. குழப்புன விரல சும்மா விடாதீங்க. அப்புறம் சப்பாத்தியத் தொட்டுச் சாப்பிட்டுப் பாருங்க...........அடடா! என்ன அருமை! என்ன அருமை!

தயிர்ச்சோறு சாப்பிடும் போது அதுல கொஞ்சம் ஹிண்டியத் தூவிக்கிட்டா பிரமாதமா இருக்கும். தோசைக்கும் இந்த ஹிண்டி மொசுரு நல்லாயிருக்கும். செஞ்சு பாத்துட்டுச் சொல்லுங்க. அப்புறம் நீங்களும் ஹிண்டி மொசுரு விசிறிதான்.

அன்புடன்,
கோ.இராகவன்நமது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தப் புகைப்படத்தை இங்க போடுறேன். வெப்காமிராவுல எடுத்ததால தெளிவா இல்லை. படத்துல பாக்குறது ஹிண்டி. இதுலதான் மொசுரு (தயிர்) கலந்து சாப்பிடனும்.

24 comments:

said...

புதுசா இருக்குது. செய்வோமா பார்க்கலாம். செய்யாட்டி அடுத்த தடவை பெண்களூர் வரும் போது சாப்புட்டுப் பாத்தா போச்சு.

said...

யோசிக்காதீங்க குமரன், செஞ்சு சாப்பிடுங்க. நல்லாருக்கும்.

said...

//ஹிண்டி மொசுரு //

கொசுவர்த்திச் சுருள்கு நன்றி . Blore la என்னொட team memeber ஒருதன்ன இந்த கன்னடதுல்ல சொல்ல சொல்லி OMG.

ஆனால் சாப்பிடது இல்லை.

said...

ராகவன்,

நீங்க இந்தப் பதிவைத் தொடங்கிருப்பது ரொம்ப நல்ல விதயம்!
நம்ம மக்களுக்கு சமையல்னா ஒரு இளக்காரம். பேசவே மாட்டேங்கிறாங்க. :(

ஒரேயொரு விதயத்தை மட்டும் ஒவ்வொரு இடுகையிலும் செய்யுங்க.

நிறையப் புகைப்படங்கள் போடுங்க. நீங்களே செய்வது என்றால் பயன்படுத்தும் பொருட்களை ஒரு படம். செய்முறைக்குத் தேவையான படங்கள், முடிந்தபிறகு ஒரு படம் என்று செய்யுங்கள்.

இங்க ஒருக்கா எட்டிப் பாருங்க.

http://nandyala.org/mahanandi

i am getting most of my daily recipes from Indira of Mahanandi. I had the same problem with arusuvai.com - no photos. :(

-Mathy

said...

ஜீரா,
கேக்க நல்லா இருக்கு. செய்யறதும் ஒண்ணும் அவ்ளோ கஷ்டமா இருக்கும்போல தெரியல..

மதி சொல்ற மாதிரி படங்களும் போடுங்களேன். படம் பாத்தேன் சாப்பிட்ட திருப்தி பட்டுப்போம் என்னைய மாதிரி காஞ்சு போய் இருக்கற ஆளுகள்லாம். :)

said...

அருமையான சமையல் குறிப்பு. கூடவே ஈருள்ளி என்பது வெங்காயம், ‍மொசறு என்பது தயிர் ‍ போன்ற தகவல்களும் கன்னடம் அறிய உதவியது. தும்பா சென்னாங்க இத்தேத.

said...

// கொசுவர்த்திச் சுருள்கு நன்றி . Blore la என்னொட team memeber ஒருதன்ன இந்த கன்னடதுல்ல சொல்ல சொல்லி OMG. //

கார்த்திக், அதென்ன OMG...விளக்கமாச் சொல்லுங்களேன்.

// ஆனால் சாப்பிடது இல்லை. //

சாப்பிட்டுப் பாருங்க. கண்டிப்பா பிடிக்கும்.

said...

// நீங்க இந்தப் பதிவைத் தொடங்கிருப்பது ரொம்ப நல்ல விதயம்!
நம்ம மக்களுக்கு சமையல்னா ஒரு இளக்காரம். பேசவே மாட்டேங்கிறாங்க. :( //

நன்றி மதி. சமையல் நமக்கெல்லாம் இளக்காரமில்லை. ரொம்பவே முக்கியம். கூடிய சீக்கிரம் அசைவத்துக்கும் ஒரு பிளாக் தொடங்கனும்.

// ஒரேயொரு விதயத்தை மட்டும் ஒவ்வொரு இடுகையிலும் செய்யுங்க.
நிறையப் புகைப்படங்கள் போடுங்க. நீங்களே செய்வது என்றால் பயன்படுத்தும் பொருட்களை ஒரு படம். செய்முறைக்குத் தேவையான படங்கள், முடிந்தபிறகு ஒரு படம் என்று செய்யுங்கள். //

ம்ம்ம்....இது செய்யலாந்தான்....முடிந்த வரைக்கும் முயற்சி பண்றேன். பிரச்சனை என்னன்னா எங்கிட்ட டிஜிடல் கேமரா இல்லை. வாங்கனும். வெப் கேம்ல போட்டோ பிடிக்க வேண்டியதுதான்.

// இங்க ஒருக்கா எட்டிப் பாருங்க.

http://nandyala.org/mahanandi

i am getting most of my daily recipes from Indira of Mahanandi. I had the same problem with arusuvai.com - no photos. :( //

நெறைய சொல்லீருக்காங்களே. இதையும் ஒரு வாட்டி வாசிச்சுப் பாக்கனும்.

said...

இப்ப மிக்சர் இருக்குறதால வெங்காயத்தை நல்லா அரைச்சு சப்பாத்தி மாவுல பெசஞ்சு கலந்துருவாங்க
ஜீரா,இந்த இடத்தில கொஞ்சம் குழம்பிப் போயிட்டேன்.

அங்க வெயில் நெறைய. அதனால குளிர்ச்சிக்கு வெங்காயத்தை இப்படி சேத்துக்குவாங்க

ஓ.தகவலுக்கு நன்றி.

இந்த மாதிரி இன்னமும் சுவை/பெயர் அறியாத கர்னாடக உணவு வகைகளை அறிமுகப்படுத்தலாமே?

அப்புறம் OMG -> Oh My God

said...

Hi,
I have tasted this when I visited Bijapur. Do you get this dish in Bangalore? Yummy Post!
Thiru

said...

// ஜீரா,
கேக்க நல்லா இருக்கு. செய்யறதும் ஒண்ணும் அவ்ளோ கஷ்டமா இருக்கும்போல தெரியல.. //

இராமநாதன், செய்யுறது ரொம்பவே லேசு. பத்து நிமிசந்தான். இதுக்கு வேண்டியதெல்லாம் ரஷ்யாவுலயும் கிடைக்குமுன்னு நெனைக்கிறேன். நீங்களும் செய்யலாம்.

// மதி சொல்ற மாதிரி படங்களும் போடுங்களேன். படம் பாத்தேன் சாப்பிட்ட திருப்தி பட்டுப்போம் என்னைய மாதிரி காஞ்சு போய் இருக்கற ஆளுகள்லாம். :) //

வெப் கேம்தான் இருக்கு. முயற்சி செய்றேன். நல்லா வந்தாப் போடுறேன்.

said...

// அருமையான சமையல் குறிப்பு. கூடவே ஈருள்ளி என்பது வெங்காயம், ‍மொசறு என்பது தயிர் ‍ போன்ற தகவல்களும் கன்னடம் அறிய உதவியது. தும்பா சென்னாங்க இத்தேத. //

தன்யவாதைகளு அனுசூயா.

தும்ப சென்னாகிதே என்று அனுசூயா சொன்னது "ரொம்ப நல்லாருக்கு".

அதுக்கு நான் நன்றி சொல்லீருக்கேன். அவ்வளவுதான். மத்தவங்க முழிக்காதீங்க.

said...

மதி, ஜீரா ஒரு கூட்டு வலைப்பதிவு துவங்கலாமா? எனக்கு எளிமையான, ட்ரெடிஷனல் சமையல்களில் ஒரு மோகம். என்ன கொஞ்சம் இப்படி அப்படி இருந்தால் எனக்குத்தான் எறங்காது.
பெங்களூர் சமையலுக்கும் மங்களூர் சமையலுக்கும் வித்தியாசம் அதிகம்.

said...

அட செய்து பார்த்துட்டா போச்சு :-)
நன்றி

said...

// மதி, ஜீரா ஒரு கூட்டு வலைப்பதிவு துவங்கலாமா? எனக்கு எளிமையான, ட்ரெடிஷனல் சமையல்களில் ஒரு மோகம். என்ன கொஞ்சம் இப்படி அப்படி இருந்தால் எனக்குத்தான் எறங்காது.
பெங்களூர் சமையலுக்கும் மங்களூர் சமையலுக்கும் வித்தியாசம் அதிகம். //

நான் ரெடி உஷா. இதையே மாத்திக்கலாமா? இல்ல புதுசு போடலாமா?

உண்மைதான். மங்களூர் சமையல் தேங்காய்ச் சமையல். கேரளாவும் தமிழ்நாடும் கலந்த மாதிரி இருக்கும். அதே நேரத்துல அசைவத்துலயும் பலவகை.

said...

// அட செய்து பார்த்துட்டா போச்சு :-)
நன்றி //

செஞ்சு பாருங்க நித்தியா. படம் வேற போட்டிருக்கேன் இப்போ.

said...

ராகவன்,
OMG -> Oh My God.

//சாப்பிட்டுப் பாருங்க. கண்டிப்பா பிடிக்கும்//
இங்கு செய்ய பொறுமை இல்லை. அடுத்த வாட்டி Blore வரும் போது சாப்புட்டுப் பாத்தா போச்சு.

said...

ஆஹா... வாங்க வாஙக்.

ஒரு பத்து நாளைக்கு முன்ன ஒரு பெயர் பதிவு பண்ணி வச்சிருக்கேன்.

சமையல்.இன்ஃபோ

ராகவன் எனக்கொரு மடல் போடுறீங்களா? நேத்திக்கு உங்க மின்னஞ்சல் முகவரியைத் தேடிட்டு விட்டுட்டேன். கூட்டு வலைப்பதிவு சம்பந்தமாப் பேசலான்னுட்டுதான் தேடினேன். இன்னிக்கு உஷா எழுதி இருக்காங்க..

ஆர்வம் இருக்கிறவங்க எனக்கொரு மடல் போடுங்களேன்.

mathygrps at gmail dot com

அடுத்த வாரத்துக்குள்ள தயார் செஞ்சிர்ரேன்.

-மதி

said...

குரோ, தும்ப சென்னாகீதே...

மாடி நோட்பிட்டு ஹேள்தினி!

:)

said...

// ராகவன் எனக்கொரு மடல் போடுறீங்களா? நேத்திக்கு உங்க மின்னஞ்சல் முகவரியைத் தேடிட்டு விட்டுட்டேன். கூட்டு வலைப்பதிவு சம்பந்தமாப் பேசலான்னுட்டுதான் தேடினேன். இன்னிக்கு உஷா எழுதி இருக்காங்க.. //

ஆகா கண்டிப்பா மதி. இன்னைக்கு ஒரு மயிலைத் தட்டி விடுறேன்.

said...

// குரோ, தும்ப சென்னாகீதே...

மாடி நோட்பிட்டு ஹேள்தினி! //

மாடி சுந்தர் மாடி. நிமகு இஷ்டாகுத்தே.

said...

ஜோள ரொட்டி, ஜொன்னத ரொட்டி, பாக்ரி (மராட்டி) என்றழைக்கப்படும் அருமையான இதை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. முன்பெல்லாம் மல்லேஸ்வரம் நடராஜ் தியேட்டர் அருகில் இருக்கும் பழைய கன்னட ஓட்டலிலும் கிடைக்கும். தார்வாட் கன்னடம் பேசும் மக்களின் கன்னடம் பழைய தமிழ் நிறையக் கலந்தது. பிஜாப்பூரிருந்து வரும் என் மராட்டிய நண்பன் தன் பாட்டியை 'ஆய்' என்றுதான் அழைப்பான். இன்னும் இப்படி எத்தனையோ.
அருள்

said...

JeeRaa,
Could you send a test mail to sudharsan.g@gmail.com?

said...

I want one I want one