Saturday, September 23, 2006

8. முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா

"இன்னைக்கு என்ன செய்யப் போற?" ராத்திரிக்கு என்னன்னு கேக்குறாராம் மயிலாரு.

"இன்னைக்கா....கறியெடுத்து கொழம்பு வெக்கனும். கோழியடிச்சி வறுவலு. மீன்...நல்ல நெய் மீனாவோ ரொகுவோ கிடைச்சா அதையும் பக்குவம் செய்யனும்..." பின்னே வேலைய முடிச்சிட்டு அலுத்துப் புலுத்து வர்ரவன் கிட்ட கேக்குற கேள்வியா.

"அடப்பாவி...இத்தன தின்னா குண்டாயிருவ.....பேசாம சத்துள்ளதா ஏதாவது செஞ்சுரு"

"சத்துள்ளதுன்னா? தின்னா சதை போடக்கூடாது. கொழுப்பு ஏறக்கூடாது. சர்க்கரச் சத்து வரக்கூடாது. அதான நீங்க சொல்றது?"

ஒரு கண்ணை மட்டும் திறந்து என்னைப் பார்த்தார் மயிலார். "ஆமா...அதேதான்." வெடுக்குன்னு சொன்னார்.

"சரி...அதையே செஞ்சிருவோம். ஆனா அதைச் செய்றது எப்படீன்னு நீங்களே சொன்னா நல்லாயிருக்கும்........" இழுத்தேன். சொல்றது எல்லாருக்கும் லேசு. ஆனா செய்றது. ஆகையால அவரையே கேட்டுட்டேன். ஆனா அவரு பாக்குறதப் பாத்தா அசந்து போற மாதிரித் தெரியலை.

"ஓட்ஸ் உப்புமா சாப்பிடுறையா? ஓட்ஸ் நல்லது." ஏதோ புதுப் பேர எடுத்து விட்டாரு மயிலாரு. இதுக்குன்னே அகராதி (ரெண்டு பொருள்ளயும் எடுத்துக் கோங்க) இருக்கும் போல.

"ஓட்ஸா? இங்கிலீஷ் கதைகள்ள குதிரைக்குக் குடுக்குறாங்களே! அதா? அது ஏதோ புல் வகையாமே! புலி பசிச்சாலும் புல்லைத் திங்காது தெரியுமா? நாங்கள்ளாம்..."

"நிறுத்து..ரொம்பப் பேசாத. வீட்டுக்குள்ளயே உக்காந்து மூனு வேளையும் மூக்கப் பிடிக்கத் தின்னுக்குட்டு நீர்யான மாதிரி இருக்க. புலியாம் புலி. ஓட்ஸ் உப்புமாதான் செய்யனும் இன்னைக்கு" அவரே முடிவெடுத்தாச்சு. இனி என்னத்த மாத்துறது. "சரி. சொல்லுங்க."

"வெங்காயம் இருக்கா? எடுத்துப் பொடிப் பொடியா நறுக்கிக்க."

"நறுக்கியாச்சு"

"பச்சமெளகா இருக்கா? எடுத்து நடுவுல கீறிக்க"

"கீறியாச்சு"

"கருவேப்பிலை இருக்கா? உருவி வெச்சுக்க"

"உருவியாச்சு"

"முட்டைக்கோசப் பொடிப் பொடியா நறுக்கிக்க"

"நறுக்கியாச்சு"

"ஓட்ஸ் எடுத்து ஒரு கிண்ணத்துல வெச்சுக்க"

"வெச்சாச்சு"

"இப்ப அடுப்புல சட்டிய வெச்சி காய வை"

"வெச்சாச்சு"

"அதுல நல்லெண்ணய ஊத்திக் காஞ்சதும் கடுகு உளுந்தம் பருப்பு போடு"

"போட்டாச்சு"

"கடுகு உளுந்தப் பருப்பு வெடிச்சதும் கருவேப்பிலை வெங்காயம் பச்சமெளகாயப் போட்டு வதக்கு"

"வதக்கியாச்சு."

"லேசா மஞ்சப் பொடியத் தூவு"

"தூவியாச்சு"

"நறுக்கி வெச்ச முட்டைக்கோச அதுல போட்டுக் கூட்டணியாக்கு"

"ஆக்கியாச்சு"

"கிண்ணத்துல இருக்குற ஓட்ஸ அதுல போட்டுக் கிண்டு"

"கிண்டியாச்சு"

"ஒன்னரக் கிண்ணம் தண்ணிய ஊத்திக் கெளறு"

"கெளறியாச்சு"

"தேவையான அளவு உப்புப் போட்டு வேகவிடு"

"விட்டாசு"

"கெட்டியானதும் அடுப்ப அணைச்சுரு"

"அணைச்சாச்சு"

"சட்டியில இருக்குற எடுத்து தலைல போட்டுக்கோ"

"போட்.....அட என்னங்க இது....தலையில போடச் சொல்றீங்க?"

"பின்னே ஒன்ன வெச்சி என்ன பண்றதாம்!... சரி சொன்னதச் செஞ்சியா?"

"செஞ்சாச்சே. ஆனா இது ரவைல செய்ற உப்புமா மாதிரி உதிரியா இல்லையே." லேசாக் கொழகொழப்பா இருக்குற மாதிரி ஒரு எண்ணம்....புதுசாச் செய்றோம்ல.

மயிலார் படக்குன்னு சொன்னாரு. "ரவையில ஒரு சத்தும் கெடையாது. ஒதுல நார்ச்சத்து மொதக்கொண்டு எல்லாம் இருக்கு. கொழுப்பு கெடையாது. சர்க்கரைச் சத்தும் கொறைச்சல். ஒடம்ப மெலிய வைக்கும். அதுனால உதிரி உதிரியா இல்லைன்னாலும் சாப்பிடு. தொண்டைக்குள்ள பட்டுக்கிறாது. இதுக்குத் தயிரும் கொஞ்சமே கொஞ்சமா ஊறுகாயும் வெச்சுக்க. நல்லாயிருக்கும்" விட்டாக் கொத்தீருவாரு போல. மயிலார் சொன்ன மாதிரியே செஞ்ச ஓட்ஸ் உப்புமாவை தட்டுல போட்டு தயிரும் ஊறுகாயும் போட்டு வெச்சிருக்கேன். கை தவறி ஊறுகா நெறைய விழுந்திருச்சு. நீங்க கொஞ்சமா போட்டுக்குங்க. இத நான் சாப்பிட்டிருவேன். ஆகையால நீங்க செஞ்சிச் சாப்பிடுங்க. சரியா?
அன்புடன்,
கோ.இராகவன்

37 comments:

said...

waw romba naal kalichu adupa patha vachirukeenga. Easya than irukkum pola irukku. senju parkanum.

said...

ஆகா இன்னிக்கு ரவைக்கு (அதாங்க ராத்திரிக்கு) என்ன பண்ணலாம்னு ரோசனையா இருந்தது, நல்ல வேளை தீத்து வெச்சீங்க மயிலாரே.

:-)

said...

ஆஹா,இது அவள் விகடன்ல்ல வந்த குறிப்பு தானே.பரவல்லை எதோ
சாப்பிடலாம்.

said...

// அனுசுயா said...
waw romba naal kalichu adupa patha vachirukeenga. Easya than irukkum pola irukku. senju parkanum. //

ஆமாம் அனுசுயா...இப்ப கேமரா இருக்குறதால...படமும் பிடிச்சிப் போட முடியுது. :-)

said...

// நன்மனம் said...
ஆகா இன்னிக்கு ரவைக்கு (அதாங்க ராத்திரிக்கு) என்ன பண்ணலாம்னு ரோசனையா இருந்தது, நல்ல வேளை தீத்து வெச்சீங்க மயிலாரே.

:-) //

பதிவு போட்டது நானு. பாரட்டு மயிலாருக்கு...ம்ம்ம்...ரவைக்கு ரவையில்லாத உப்புமா செஞ்சி தயிர்+ஊறுகாயோடு சாப்பிடுங்கள். ஓட்ஸ் சுவை புதிதாக இருக்கும். சாப்பிடச் சாப்பிடப் பழகிவிடும்.

said...

// MeenaArun said...
ஆஹா,இது அவள் விகடன்ல்ல வந்த குறிப்பு தானே.பரவல்லை எதோ
சாப்பிடலாம். //

அவள்விகடன்ல வந்ததா! இதுல ஏதோ சதி இருக்கு. இல்ல...இல்ல....இல்ல....இது மயிலாரோட சொந்தக் கண்டுபிடிப்பு.

said...

என்னங்க நீங்க முதல்ல போட்டிருந்த போட்டோவுக்கும் இப்போ போட்டிருக்கிற போட்டோவுக்கும் சம்பந்தமே இல்லை.

said...

ஆமாங்க,15-9-06 இதழ்ல்ல,30 வகை டிபன்னில இருந்து நான் இதை செய்து பார்தேன் .அதோட லிங் இது.

http://www.vikatan.com/aval/2006/sep/15092006/aval0303a.asp

said...

கூடுதலா நீங்க் கோஸ் சேர்த்து சமைச்சீர்ருக்கிங்க .அதனால இது வேறே அது வேறே.

said...

// குமரன் எண்ணம் said...
என்னங்க நீங்க முதல்ல போட்டிருந்த போட்டோவுக்கும் இப்போ போட்டிருக்கிற போட்டோவுக்கும் சம்பந்தமே இல்லை. //

குமரன்....என்ன சொல்றீங்க? என்னோட ஃபோட்டோவா? உப்புமாவோட ஃபோட்டோவா?

என்னோடதுன்னா...போன படம் மார்ச்சுல எடுத்தது. இந்தப் படம் செப்டம்பர்ல எடுத்தது. நடுவுல ஆறு மாசம். பாதி வயசு கூடிருக்குல்ல. அதோட விளைவா இருக்கும்.

said...

// MeenaArun said...
ஆமாங்க,15-9-06 இதழ்ல்ல,30 வகை டிபன்னில இருந்து நான் இதை செய்து பார்தேன் .அதோட லிங் இது.

http://www.vikatan.com/aval/2006/sep/15092006/aval0303a //

பாத்தீங்களா மீரா...இனிமே நம்ம எதுவும் செஞ்சா பேட்டண்டு வாங்கி வெச்சுக்கிறனும். ஓட்ஸ் தோசைன்னு ஒரு குறிப்பு மயிலார் சொல்லீருக்காரு...அதை அவள்விகடன்ல போட்டுறலையே!!!!!!!!!!!

said...

அதல்லாம் போடலை,ஆனா நாங்க இங்க(மஸ்கட்ல) ஓட்ஸ் தோசை,சோயா இட்லி எல்லாமே தோழிங்க உபயத்தில செய்து சாப்பிடிருக்கோம்

said...

// MeenaArun said...
அதல்லாம் போடலை,ஆனா நாங்க இங்க(மஸ்கட்ல) ஓட்ஸ் தோசை,சோயா இட்லி எல்லாமே தோழிங்க உபயத்தில செய்து சாப்பிடிருக்கோம் //

நல்லவேளை....சரி...சோயா இட்லி பத்திச் சொல்லிக் குடுங்களேன். தெரிஞ்சிக்கிறோம்.

said...

மணமணக்குதே!!

said...

சோயா இட்லிக்கு 4 பங்கு அரிசிக்கு,3/4 பங்கு உளுந்து,1/2 பங்கு சோயா பருப்பு .இது தான் ratio.அரிசியயும்,சோயா + உளுந்த் ரெண்டும் தனி தனிய 4 மணி நேரத்க்கு ஊற வச்சி அவங்க அவங்க எப்படி அரைப்பாங்களோ,அது மாதிரி அரைச்சு ,உப்பு கலந்து ,7-8 மணி நேரம் கழித்து இட்லி செய்யலாம்
ரொம்ப வித்தியாசம் தெரியாது

said...

ஓட்ஸ் உப்புமா பாக்க நல்லா இருக்கு.

முதல்ல ஓட்ஸ் ஐ எண்ணெய் விடாம வெறும் வாணலியில வறுத்துட்டு செய்யுங்க. கொஞ்சம் உதிரியா வரும்.

இதே மாதிரி அவல்லயும் செய்யலாம்.

said...

புதுமையான சமையல்!பார்க்க நன்றாகதான் உள்ளது.சமைத்து பார்க்க ஆசைதான்.ஆனால் சாப்பிடதான் பயமாக உள்ளது.என் சமையல் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை.ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு முயற்சி செய்து பார்கின்றேன்.

said...

ராகவன் சமையல் கலையெல்லாம் அத்துபடியா?

said...

Good & Useful...

said...

ராகவன் புதுமையான recipe...thx for sharing.

said...

இராகவன்,
நல்ல பதிவு. ஆன்மீகம், இலக்கியம்... இப்ப சமையல் குறிப்புகளுமா... சகலகலா வல்லவன்தான் , huh?இராகவன் சும்மா சொல்லக் கூடாது, உங்களின் வாழ்க்கைத் துணைவியாராக வரப்போகிறவர் மிகவும் கொடுத்து வைத்தவர்.

said...

ராகவன்,

ஓட்ஸ் உங்களுக்கு புதுசு போலருக்கு..

ஆனா ஏறக்குறைய ஏழு வருசமா அதுதான் என் காலை உணவு.. உப்புமா இல்ல கஞ்சி..

உப்புமா செய்யணும்னா அதுலா லேசா.. சுமார் கால் பங்கு பம்பாய் ரவைய சேத்துக்கணும்.. தண்ணி சாதாரணமா வைக்கறத விட கம்மியா வைக்கணும்.. அதே மாதிரிதான் வெங்காயமும்.. ரொம்பவும் வேகவிடாம இறக்கிறணும்..

சாப்பிடும்போது ஒரு பச்சை வாழப்பழம் (கனிஞ்சது) சேர்த்து பிசைஞ்சி சாப்பிட்டா ஒங்க மாதிரி இளைஞர்களுக்கு நல்லது..

ஓட்ஸ் ஒரு கொலாஸ்ட்ரல் ஃபைட்டர். அதனால எங்க மாதிரி பெருசுகளுக்கு ஏற்ற உணவு. அதனாலதான் ஒங்கள வாழைப்பழம் சேத்துக்கச் சொல்றேன்..

பத்து வருசத்துக்கும் மேல தனியா பொங்கி சாப்பிட்டவன் நான்.. அதனால சொல்றேன்..

said...

அட போங்கப்பா! நீங்க வேற நோன்பு நேரத்துல! :)

said...

ராகவா!
எண்ணெய்,உப்பு,பச்சைமிளகாய் எல்லாம் நமக்குச் சரிப்படாது. படம் ஆசையாதான் இருக்கு!
ம்.....அதுக்குக் கொடுப்பனவு இருக்க வேண்டும்.நீங்க இளம்பிள்ளைகள் அனுபவியுங்கோ!
ராகவா!
மறந்துட்டேன்; ஒங்க புதுப் படம் "மென்டலின் சிறீநிவாஸ் " போல் இருக்குறீங்க!! உண்மை!
யோகன் பாரிஸ்

said...

முட்டைக்*சு தின்னு தின்னு அலுத்து, இப்ப அதைப் பார்த்தாலே/கேட்டாலெ ஒரு அலர்ஜி.
அதான் மூக்கைப் பொத்திக்கிட்டு வந்து படிச்சுட்டுப்போனேன்.

'வெறும் ஓட்ஸ்' உப்புமாவுக்கே என் ஓட்டு:-)

said...

தோழியின் அப்பா முட்டைக்கோஸ் என்றதை------ இப்படிச் சொல்லக்கேட்டு இப்ப அதே வழக்கம்
நம்ம வீட்டிலும் ஒட்டிக்கிச்சு.
அதுலே ஒரு உண்மையும் இருக்குதான்:-)))

said...

print out இல்லத்தரசிகிட்ட கொடுத்தாச்சு... அனேகமா இன்னிக்கு நோன்பு திறக்க (இஃப்தார்) ரெடியா இருக்கும். :)

said...

// MeenaArun said...
சோயா இட்லிக்கு 4 பங்கு அரிசிக்கு,3/4 பங்கு உளுந்து,1/2 பங்கு சோயா பருப்பு .இது தான் ratio.அரிசியயும்,சோயா + உளுந்த் ரெண்டும் தனி தனிய 4 மணி நேரத்க்கு ஊற வச்சி அவங்க அவங்க எப்படி அரைப்பாங்களோ,அது மாதிரி அரைச்சு ,உப்பு கலந்து ,7-8 மணி நேரம் கழித்து இட்லி செய்யலாம்
ரொம்ப வித்தியாசம் தெரியாது //

நன்றி மீனா. கண்டிப்பா செஞ்சு பாக்குறேன். புதுமையான செய்முறை குடுத்ததுக்கு நன்றி.

said...

// தம்பி said...
மணமணக்குதே!! //

செஞ்சு பாருங்க தம்பி...சுவைசுவைக்கும். அதுலயும் தயிர் ஊறுகாய்க் கூட்டணியோட.

// t.h.u.r.g.a.h said...
புதுமையான சமையல்!பார்க்க நன்றாகதான் உள்ளது.சமைத்து பார்க்க ஆசைதான்.ஆனால் சாப்பிடதான் பயமாக உள்ளது.என் சமையல் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை.ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு முயற்சி செய்து பார்கின்றேன். //

என்னங்க இப்படிச் சொல்லீட்டீங்க....அதுக்குத்தான எளிமையான குறிப்புகளா சொல்றது. செஞ்சு பாருங்க.

// ENNAR said...
ராகவன் சமையல் கலையெல்லாம் அத்துபடியா? //

கொஞ்சம் கொஞ்சம் வரும் என்னார்.

// செந்தழல் ரவி said...
Good & Useful... //

நன்றி ரவி.

said...

// kalpanapari said...
ராகவன் புதுமையான recipe...thx for sharing. //

செஞ்சு பாருங்க கல்பனா...நல்லாயிருக்கும்.


// வெற்றி said...
இராகவன்,
நல்ல பதிவு. ஆன்மீகம், இலக்கியம்... இப்ப சமையல் குறிப்புகளுமா... சகலகலா வல்லவன்தான் , huh?இராகவன் சும்மா சொல்லக் கூடாது, உங்களின் வாழ்க்கைத் துணைவியாராக வரப்போகிறவர் மிகவும் கொடுத்து வைத்தவர். //

போங்க வெற்றி. எனக்கு வெக்கமா இருக்கு :-)

said...

// tbr.joseph said...
ராகவன்,

ஓட்ஸ் உங்களுக்கு புதுசு போலருக்கு.. //

இல்ல ஜோசப் சார். தூத்துக்குடிக்காரனுக்கு ஓட்ஸ் புதுசாகுமா? சின்னப்புள்ளைல எலஞ்சின்னு தூத்துக்குடியில ஓட்ஸ் முழுமுழுசா விக்க வரும். வாங்கித் தட்டுல போட்டுக் குடுத்தா நச்சு நச்சுன்னு திம்பேன். :-)

// ஆனா ஏறக்குறைய ஏழு வருசமா அதுதான் என் காலை உணவு.. உப்புமா இல்ல கஞ்சி..

உப்புமா செய்யணும்னா அதுலா லேசா.. சுமார் கால் பங்கு பம்பாய் ரவைய சேத்துக்கணும்.. தண்ணி சாதாரணமா வைக்கறத விட கம்மியா வைக்கணும்.. அதே மாதிரிதான் வெங்காயமும்.. ரொம்பவும் வேகவிடாம இறக்கிறணும்..

சாப்பிடும்போது ஒரு பச்சை வாழப்பழம் (கனிஞ்சது) சேர்த்து பிசைஞ்சி சாப்பிட்டா ஒங்க மாதிரி இளைஞர்களுக்கு நல்லது..

ஓட்ஸ் ஒரு கொலாஸ்ட்ரல் ஃபைட்டர். அதனால எங்க மாதிரி பெருசுகளுக்கு ஏற்ற உணவு. அதனாலதான் ஒங்கள வாழைப்பழம் சேத்துக்கச் சொல்றேன்..

பத்து வருசத்துக்கும் மேல தனியா பொங்கி சாப்பிட்டவன் நான்.. அதனால சொல்றேன்.. //

உண்மைதான் சார். ஓட்ஸ் கொழுப்பைக் கொறைக்கும். அதுனாலதான் சாப்பிடுறேன். ஓட்ஸ்ல இன்னும் நெறைய வகைகள் கண்டு பிடிச்சிருக்கேன் சார். அப்பப்ப எடுத்து விடுறேன். நமக்கு நம்மூர் பாணியில இருக்கனும். அத்தோட சத்தும் இருக்கனும். அதுக்கேத்த மாதிரி சமையல் குறிப்புகள் இருக்குது. நீங்களும் கைப்பக்குவம் தெரிஞ்சவங்களா இருக்கீங்க...அப்படியே ஒரு வலைப்பூவத் தொடங்க வேண்டியதுதானே.

said...

// லொடுக்கு பாண்டி said...
அட போங்கப்பா! நீங்க வேற நோன்பு நேரத்துல! :)

print out இல்லத்தரசிகிட்ட கொடுத்தாச்சு... அனேகமா இன்னிக்கு நோன்பு திறக்க (இஃப்தார்) ரெடியா இருக்கும். :) //

ஆண்டவா! சரி. இறையருளால எல்லாம் நல்லபடி இருக்கும். துணிச்சு போங்க. சுவை புதுமையாத் தெரிஞ்சாலும் ஓட்ஸ்சும் முட்டைக்கோசும் ஒடம்புக்கு ரொம்பவும் நல்லது. குறிப்பாக் கொழுப்பைக் கட்டுப்படுத்தும்.

இன்றைய இப்தார் எப்படியிருந்ததுன்னும் கருத்து சொல்லுங்க. ஆவலா இருக்கேன். :-)

said...

// துளசி கோபால் said...
முட்டைக்*சு தின்னு தின்னு அலுத்து, இப்ப அதைப் பார்த்தாலே/கேட்டாலெ ஒரு அலர்ஜி.
அதான் மூக்கைப் பொத்திக்கிட்டு வந்து படிச்சுட்டுப்போனேன்.

'வெறும் ஓட்ஸ்' உப்புமாவுக்கே என் ஓட்டு:-) //

என்ன டீச்சர் இப்படிச் சொல்லீட்டீங்க :-)))))))))))) ஒரு வாட்டி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க. இதுகூட வெங்காயத் துவையல் வெச்சுச் சாப்பிட்டாலும் நல்லாயிருக்கும். மூக்கைப் பொத்தாமலே சாப்பிடலாம். :-)

// தோழியின் அப்பா முட்டைக்கோஸ் என்றதை------ இப்படிச் சொல்லக்கேட்டு இப்ப அதே வழக்கம்
நம்ம வீட்டிலும் ஒட்டிக்கிச்சு.
அதுலே ஒரு உண்மையும் இருக்குதான்:-))) //

கிழிஞ்சது போங்க. முட்டைக்கோஸ் உடம்பில கொழுப்பைக் குறைக்கும். ரத்தசுத்தி செய்யும். இன்னும் நெறைய இருக்கு.

said...

நீங்களும் கைப்பக்குவம் தெரிஞ்சவங்களா இருக்கீங்க...அப்படியே ஒரு வலைப்பூவத் தொடங்க வேண்டியதுதானே.//

நீங்க வேற ராகவன்.. இப்பவே த.ம முகப்பு பக்கத்த நீங்களே புடிச்சிக்கறீங்களே சார்ன்னு ஒரு பேச்சு உலவுது.. இதுல இதயும் சேர்த்துட்டா கேக்கவே வேணாம்..

said...

நன்றி ராகவன்,
இன்று காலை ஓட்ஸ் உப்புமா தான் சாப்பிட்டேன். ஆனால் ஊறுகாய் தொட்டு கொள்ள மறந்துட்டேன்

said...

//"ஓட்ஸா? இங்கிலீஷ் கதைகள்ள குதிரைக்குக் குடுக்குறாங்களே! அதா? //

ஹா ஹா. சூப்பரா எழுதறீங்க. நான் படிக்க ஆரம்பிச்ச நேரம், நிறுத்தீட்டீங்க போல :(

said...

Good dietin option would try